'காஞ்சனா 4' : அப்டேட் கொடுத்த ராகவா லாரன்ஸ்

'பென்ஸ்' படத்தில் ராகவா லாரன்ஸ் நடித்து வருகிறார்.
Kanchana 4 Update: Raghava Lawrence Gears Up For New Thrills With Horror Comedy Film Series
Published on

சென்னை,

ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கிய 'காஞ்சனா' திரைப்படம் கடந்த 2011-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இதன் தொடர்ச்சியாக 2015-ல் 'காஞ்சனா 2' மற்றும் 2019-ல் 'காஞ்சனா 3' என அடுத்தடுத்த பாகங்களை ராகவா லாரன்ஸ் இயக்கினார். ஹாரர் - காமெடி ஜானரில் உருவான இந்த படங்கள் பேமிலி ஆடியன்சை கவர்ந்தது.

'சந்திரமுகி-2', 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படங்களை தொடர்ந்து தற்போது 'பென்ஸ்' படத்தில் ராகவா லாரன்ஸ் நடித்து வருகிறார். இந்தப்படத்தினை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தயாரிக்கிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன் 'காஞ்சனா 4' படம் குறித்த சில தகவல்கள் இணையத்தில் வைரலாகின. ஆனால், அதற்கு ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் தளத்தில் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என தெரிவித்திருந்தார்.

தற்போது செய்தியாளர்களின் சந்திப்பின்போது 'காஞ்சனா 4' படத்திற்கான அப்டேட்டை ராகவா லாரன்ஸ் வெளியிட்டார். அப்போது அவர் கூறுகையில், 'தற்போது பென்ஸ் படத்தில் நடித்து கொண்டிருக்கிறேன். 'காஞ்சனா 4' கதையை எழுதி முடித்திருக்கிறேன். படப்பிடிப்பு விரைவில் தொடங்கும்' என்றார்

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com