மீண்டும் இணையும் நானி, சாய்பல்லவி?

’ராமாயணம்’ படத்தில் சீதையாக சாய் பல்லவி நடித்து வருகிறார்.
Nani and Sai Pallavi to team up again
Published on

சென்னை,

தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் 'குபேரா' படத்தை இயக்குனர் சேகர் கம்முலா இயக்கி வருகிறார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில், சேகர் கம்முலா இயக்க உள்ள புதியபடத்தில் நானி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு துவங்கவுள்ளதாகவும் இதில் கதாநாயகியாக நடிக்க சாய் பல்லவியிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. சாய் பல்லவி முன்னதாக, சேகர் கம்முலா இயக்கத்தில் 'பிடா' மற்றும் 'லவ் ஸ்டோரி' ஆகிய படங்களில் பணியாற்றி இருக்கிறார்.

அதேபோல், நானி மற்றும் சாய் பல்லவி இணைந்து 'எம்சிஏ' மற்றும் 'ஷியாம் சிங்கா ராய்' ஆகிய இரண்டு பிளாக்பஸ்டர் படங்களில் பணியாற்றியுள்ளனர். இந்த தகவல் உண்மையாகும் பட்சத்தில், சாய் பல்லவியுடன் நானி மற்றும் சேகர் கம்முலா இணைந்து பணியாற்றுவது இது மூன்றாவது முறையாகும்.

நானி மற்றும் சாய்பல்லவி மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி இருப்பது அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 'சூர்யாவின் சனிக்கிழமை' திரைப்படத்தின் வெற்றியைத்தொடர்ந்து, நானி 'கோர்ட் ' மற்றும் ஹிட் 3 ஆகிய படங்களில் கமிட் ஆகியுள்ளார். சாய் பல்லவி ராமாயணம் படத்தில் சீதையாக நடித்து வருகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com