மாத சம்பளத்திற்கு மனைவியாக இருக்க அழைத்த தொழில் அதிபர்- நடிகை நீது சந்திரா

ரூ.25 லட்சம் மாத சம்பளத்திற்கு மனைவியாக இருக்கும்படி தொழிலதிபர் ஒருவர் கூறியதாக நடிகை நீது சந்திரா கலங்கியபடி தெரிவித்துள்ளார்.
மாத சம்பளத்திற்கு மனைவியாக இருக்க அழைத்த தொழில் அதிபர்- நடிகை நீது சந்திரா
Published on

தமிழில் 2009-ல் வெளியான 'யாவரும் நலம்' படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து பிரபலமானவர் நீது சந்திரா. தீராத விளையாட்டு பிள்ளை, யுத்தம் செய், ஆதிபகவன், சேட்டை, திலகர், வைகை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட படங்களிலும் நடித்து இருக்கிறார். 

சிங்கம்-3 படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார். தெலுங்கு, இந்தி, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். பீகாரை சேர்ந்தவர். தற்போது நீது சந்திராவுக்கு பட வாய்ப்புகள் இல்லை. இதுகுறித்து நீது சந்திரா அளித்துள்ள பேட்டியில், ''எனது வாழ்க்கை என்பது ஒரு வெற்றிபெற்ற நடிகையின் தோல்விக் கதையை போன்றது. நான் 13 தேசிய விருதுகள் பெற்றவர்களுடன் பணியாற்றி இருக்கிறேன். பெரிய படங்களில் நடித்து இருக்கிறேன். ஆனால் இப்போது பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறேன். ஒரு பெரிய தொழில் அதிபர் மாத சம்பளத்துக்கு மனைவியாக வருமாறு என்னை அழைத்தார். மாதம் ரூ.25 லட்சம் சம்பளம் தருகிறேன் என்று பேரம் பேசினார். மனைவியாக இருக்க சம்பளம். இப்போது என்னிடம் பணம் இல்லை, பட வாய்ப்புகளும் இல்லை. இதை நினைக்கும்போது வேதனையாக இருக்கிறது. அதிக படங்களில் நடித்து இருந்தும் தேவையில்லாதவள் போலவே இருக்கிறேன். ஒரு படத்தில் நடிக்க தேர்வான ஒரு மணி நேரத்தில் படத்தில் இருந்து இயக்குனர் என்னை நீக்கி விட்டார். அவரது பெயரை சொல்ல விரும்பவில்லை" என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com