நெல்சன்- கவின் இணையும் படத்தின் ஜாலியான புரொமோ வீடியோ

நெல்சன் திலீப் குமார் தயாரிக்கும் முதல் படத்தில் நடிகர் கவின் நடிக்கவுள்ளார்.
Published on

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் நெல்சன் திலிப்குமார் முக்கியமானவர். ரஜினிகாந்த் நடிப்பில் இயக்கிய ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. உலகளவில் 600 கோடி ரூபாய் வசூலித்தது குறிப்பிடத்தக்கது. அதை தொடர்ந்து சமீபத்தில் நெல்சன் அவரது தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். அதற்கு பிலமண்ட் பிக்சர்ஸ் என பெயரிட்டுள்ளார்.

அந்த நிறுவனம் தயாரிக்கும் முதல் படத்தின் தகவலை இன்று வெளியிட்டார். நெல்சன் தயாரிப்பில் கவின் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குனரான சிவபாலன் முத்துகுமார் இயக்கவுள்ளார். இவர் இதற்கு முன் நெல்சன் திலிப்குமாரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். 

படத்திற்கு "பிளடி பெக்கர்" என தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தின் டைட்டில் ரிவீலிங்க் வீடியோவை நகைச்சுவை பாணியில் நெல்சன், ரெடின் கிங்ஸ்லி, கவின், சிவபாலன் ஆகியோர் நடித்து வெளியிட்டுள்ளனர். வீடியோ காட்சிகள் தற்பொழுது  வைரலாகி வருகிறது. 

கவின் தற்பொழுது நடித்து இருக்கும் ஸ்டார் படம் வரும் மே 10-ம் தேதி வெளியாகவுள்ளது. அடுத்தடுத்து வித்தியாசமான கதைக்களத்தில் நடித்து வருகிறார் கவின்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com