கருணாஸ் தயாரித்து நடிக்கும் புதிய படம்

நகைச்சுவை நடிகராகவும் குணசித்திர வேடங்களிலும் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்துள்ள கருணாஸ் தற்போது `சல்லியர்கள்' என்ற படத்தை கரிகாலனுடன் இணைந்து தயாரித்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.
கருணாஸ் தயாரித்து நடிக்கும் புதிய படம்
Published on

இதில் அவரது மகன் கென் மற்றும் ஈஸ்வர் இணைந்து இசையமைத்துள்ளனர். சத்யா தேவி, திருமுருகன், மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கிட்டு இயக்கி உள்ளார். பட விழாவில் கருணாஸ் பேசும்போது, ''சல்லியர்கள் படத்தில் எனது மகனின் நண்பர் ஈஸ்வரை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்துகிறேன். என் மகனும் இணைந்து இசையமைப்பு பணிபுரிந்துள்ளார். ஆனாலும் அவர் ஒரு நல்ல நடிகனாக வரவேண்டும் என்றுதான் நான் ஆசைப்படுகிறேன். இனிவரும் நாட்களில் எல்லாவிதமான தகுதிகளையும் வளர்த்துக் கொண்டால் எதிர்காலத்திற்கு நல்லதாக இருக்கும்.

தமிழகத்தில் விஸ்காம் படித்து விட்டு வருடத்திற்கு 2500 மாணவர்கள் வெளிவருகின்றனர். இவர்களுக்கு உதவ வேண்டிய தயாரிப்பாளர் சங்கம் அதை செய்யவில்லை. 1985-ல் இருந்து ஈழத்தமிழர்களுக்காக என்னால் இயன்றவரை உதவுகிறேன். எனது சொந்தப்பணத்தில் 153 இலங்கை அகதி மாணவர்களை படிக்க வைத்தேன். இன்று அவர்கள் நல்ல வேலைகளில் இருக்கிறார்கள். இப்படி ஒரு கட்டமைப்பை உருவாக்கி பின்னால் வரும் கென், ஈஸ்வர் போன்ற இளைஞர்களிடம் கொடுத்து விடுகிறேன்.இதுதான் என்னுடைய விஷன்.. இதற்கு எவ்வளவு செலவானாலும் பத்து பேரிடம் பிச்சை எடுத்தாவது அந்த பணத்தை கொடுப்பேன்" என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com