கங்கனா படத்தை புறக்கணித்த பி.சி.ஸ்ரீராம்

கங்கனா படத்தை ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் புறக்கணித்துள்ளார்.
கங்கனா படத்தை புறக்கணித்த பி.சி.ஸ்ரீராம்
Published on

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலைக்கு பிறகு வாரிசு நடிகர்கள், மராட்டிய மாநில அரசு மற்றும் மும்பை போலீசோடு நடிகை கங்கனா ரணாவத் மோதி வருகிறார். நடிகர், நடிகைகள் மத்தியில் போதை பொருட்கள் புழங்குவதாகவும் குற்றம்சாட்டி உள்ளார். இந்த நிலையில் கங்கனா ரணாவத் நடிக்கும் புதிய படத்துக்கு ஒளிப்பதிவு செய்யும்படி வந்த அழைப்பை புறக்கணித்து விட்டதாக பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், கங்கனா ரணாவத் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் ஒரு படத்தில் பணியாற்ற வந்த வாய்ப்பை நான் ஒப்புக்கொள்ளவில்லை. மனதுக்குள் ஒரு அசவுகரியம் ஏற்பட்டதை உணர்ந்தேன். இதனை படக்குழுவினர் புரிந்து கொண்டனர். சில நேரங்களில் நம் உள்ளத்தில் சரியென்று தோன்றுவதுதான் முக்கியம். அந்த படக்குழுவுக்கு எனது வாழ்த்துகள் என்று கூறியிருந்தார். இதற்கு டுவிட்டரில் பதில் அளித்துள்ள கங்கனா ரணாவத், உங்களுடன் பணியாற்றும் வாய்ப்பை நான் இழந்து விட்டேன். என்னை பற்றி உங்களுக்கு இதுபோன்ற அசவுகரியம் எற்பட்டதற்கான காரணம் எனக்கு தெரியவில்லை. நீங்கள் சரியான முடிவை எடுத்து இருக்கிறீர்கள். வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com