பொன்னியின் செல்வன் படத்தில் அனுஷ்கா?

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை படமாக்கும் முயற்சியில் மணிரத்னம் ஈடுபட்டுள்ளார்.
பொன்னியின் செல்வன் படத்தில் அனுஷ்கா?
Published on

60-க்கும் மேற்பட்ட கதாபாத்திரங்களை கொண்ட இந்த நாவலில் ராஜராஜ சோழன் மற்றும் தந்தையார் சுந்தர சோழன், அண்ணன் ஆதித்த கரிகாலன், அக்கா குந்தவை, குந்தவையின் காதல் கணவன் வந்தியத் தேவன், ராஜராஜ சோழனின் மனைவி வானதி, குறுநில மன்னர்களில் ஒருவரான பழுவேட்டரையர், வீரபாண்டியன், ஈழத்து அழகி பூங்குழலி, தந்திரம் மிக்க ஆழ்வார்கடியான், வீரபாண்டியனுக்காக சோழ சாம்ராஜ்யத்தை ஆட்டுவித்த நந்தினி உள்பட 10 கதாபாத்திரங்கள் முக்கியமானவை.

இதில் வந்தியத்தேவனாக கார்த்தி, பூங்குழலியாக நயன்தாரா, சுந்தரசோழனாக அமிதாப்பச்சன், ஆதித்த கரிகாலனாக விக்ரம், குந்தவையாக கீர்த்தி சுரேஷ், நந்தினியாக ஐஸ்வர்யாராய் ஆகியோர் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடிக்க சத்யராஜ் தேர்வாகி உள்ளார். ஜெயம்ரவியும் நடிக்கிறார்.

தற்போது அனுஷ்காவும் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் இதுகுறித்து அவருடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அனுஷ்கா சமீபத்தில் வெளிநாடு சென்று உடல் எடையை சிகிச்சை மூலம் குறைத்து வந்துள்ளார். மாதவனுடன் சைலன்ஸ் படத்திலும் நடித்து வருகிறார்.

பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக தயாராகிறது. இதன் படப்பிடிப்பு இந்த வருடம் இறுதியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com