உடைமைகள் மாயம்... லண்டனில் தவிக்கும் நடிகை சனாகான்

உடைமைகள் மாயம்... லண்டனில் தவிக்கும் நடிகை சனாகான்
Published on

தமிழில் சிலம்பாட்டம் படத்தில் சிம்பு ஜோடியாக நடித்து பிரபலமானவர் சனாகான். தம்பிக்கு இந்த ஊரு, ஆயிரம் விளக்கு படங்களிலும் நடித்து இருந்தார்.

இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். இரண்டு வருடங்களுக்கு முன்பு முப்தி அனாத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். கடந்த ஜூலை மாதம் சனாகானுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

தற்போது தனது கணவர் மற்றும் குழந்தையுடன் லண்டனுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள சனாகான் விமான நிலையத்தில் உடைமைகளை இழந்து தவித்து வருகிறார்.

ஓட்டலில் இருந்து சனாகான் வெளியிட்டுள்ள வீடியோவில், "நான் லண்டனில் வந்து இறங்கி 2 நாட்கள் ஆகியும் எனது உடைமைகள் பற்றி எந்த தகவலும் இல்லை. மாற்றுத்துணி கூட இல்லாமல் ஒரே உடையை அணிந்து இருக்கிறேன்.

எனது குழந்தைக்கு தினமும் 5 உடைகள் மற்றும் 10 டயபர் மாற்ற வேண்டும். அதை செய்ய முடியாமல் மிகவும் சிரமப்படுகிறேன். விமான நிறுவனம் இந்த பிரச்சினையில் கவனம் செலுத்தி லக்கேஜ் கிடைக்க எங்களுக்கு உதவ வேண்டும்'' என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com