பிரபாஸ் நடிக்கும் 'தி ராஜா சாப்' படப்பிடிப்பில் இணைந்த மாளவிகா மோகனன்

'தி ராஜா சாப்' படத்தின் படப்பிடிப்பில் நடிகை மாளவிகா மோகனன் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.
பிரபாஸ் நடிக்கும் 'தி ராஜா சாப்' படப்பிடிப்பில் இணைந்த மாளவிகா மோகனன்
Published on

டோலிவுட் எனும் தெலுங்கு திரை உலகில் குறுகிய வட்டத்தில் பயணித்துக் கொண்டிருந்த பிரபாஸை ஒரு பான் இந்தியா நடிகராக உயர்த்தியது பாகுபலி திரைப்படம். இப்படத்தின் வெற்றி பிரபாஸின் இமேஜை அதிகரித்தது. அதைத் தொடர்ந்து பிரபாஸ் நடிக்கும் அனைத்து திரைப்படங்களும் பான் இந்தியா அளவில் வெளியிடப்படுகிறது. பாகுபலியைத் தொடர்ந்து பிரபாஸ் நடிப்பில் வெளியான சாஹோ, ராதே ஷ்யாம், ஆகிய திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களைபெற்றன.

'சலார்' திரைப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து பிரபாஸ் நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'கல்கி 2898 ஏ.டி' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.

பிரபாஸ் ஒப்பந்தமாகி இருக்கும் மற்றொரு திரைப்படம் 'தி ராஜா சாப்'. இப்படத்தின் அறிவிப்பு முதல் தோற்றத்துடன் கடந்த ஜனவரி மாதம் வெளியானது. மாருதி இயக்கும் இப்படத்திற்கு தமன் இசை அமைக்கிறார். பீப்பிள் மீடியாபேக்டரியின் கீழ் டிஜி விஸ்வ பிரசாத் இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தில் பிரபாஸூடன், மாளவிகா மோகனன், நிதி அர்வால், ரித்தி குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பில் நடிகை மாளவிகா மோகனன் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படப்பிடிப்பில் நடிகர் பிரபாஸ் தாமதமாக பங்கேற்பார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com