பிரபாஸ் நடிக்கும் 'தி ராஜா சாப்' படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது

மாருதி இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் 'தி ராஜா சாப்' படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது.
Published on

தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக இருந்துவந்த பிரபாஸ், பாகுபலி படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானார். அதனைத்தொடர்ந்து இவர் நடிக்கும் அனைத்து திரைப்படங்களும் இந்திய அளவில் வெளியாகின்றன. சமீபத்தில், பிரபாஸ் நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகிய 'கல்கி 2898 ஏ.டி' திரைப்படம் ரூ.1,000 கோடிக்கும் மேல் கடந்து வசூல் சாதனை செய்தது.

இதற்கு அடுத்ததாக, மாருதி இயக்கத்தில் ஹாரர் காமெடி கதைக்களத்தில் உருவாகும் 'தி ராஜா சாப்' படத்தில் நடிக்க பிரபாஸ் ஒப்பந்தமாகி இருக்கிறார். தமன் இசையமைக்கும் இப்படத்தில் பிரபாசுடன், மாளவிகா மோகனன், நிதி அகர்வால், ரித்தி குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பிரபாசின் அடுத்த படத்தில் கதாநாயகியாக பாகிஸ்தான் நடிகை சஜல் அலி நடிக்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை.

பீப்பிள் மீடியா பேக்டரி மற்றும் ஜிஎஸ்கே மீடியா ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தினை தயாரிக்கிறது.

தற்போது 'தி ராஜா சாப்' படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது. மேலும், 2025-ம் ஆண்டு ஏப்ரல் 10-ம் தேதி இப்படம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com