ராஜீவ் கொலை வழக்கு வெப் தொடராகிறது

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி 1991-ம் ஆண்டு மே மாதம் 21-ந் தேதி ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரசாரத்துக்கு வந்தபோது பெண் மனித வெடிகுண்டால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் வெப்தொடராக தயாராக உள்ளது.
ராஜீவ் கொலை வழக்கு வெப் தொடராகிறது
Published on

இந்த தொடரை நாகேஷ் குக்குனூர் டைரக்டு செய்கிறார். ராஜீவ் கொலை மற்றும் அதன் பிறகு கொலையாளிகளை பிடிக்க போலீசார் நடத்திய மனித வேட்டை ஆகிய உண்மை சம்பவங்களை இந்த தொடரில் காட்சிப்படுத்த உள்ளனர்.

சி.பி.ஐ.யின் சிறப்பு புலனாய்வு குழுவினர் நடத்திய விசாரணை, கொலையாளிகள் அடையாளம் காணப்பட்டு அவர்களின் மறைவிடத்தை நெருங்கிய நிகழ்வு போன்ற முழு விவரங்களும் வெப் தொடரில் இருக்கும் என்று டைரக்டர் தெரிவித்து உள்ளார்.

இதில் நடிக்கும் நடிகர்-நடிகை தேர்வு நடக்கிறது. இந்த வெப் தொடர் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் தயாராக உள்ளது. ராஜீவ் கொலை வழக்கு ஏற்கனவே ஏ.எம்.ஆர்.ரமேஷ் இயக்கத்தில் 2006-ல் குப்பி என்ற பெயரில் திரைப்படமாக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com