

புதுடெல்லி,
இந்தியாவில் பல்வேறு காரணிகளால் பிரிந்திருக்கும் சினிமா துறையை ஒன்றிணைக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு நடிகை கங்கனா ரனாவத் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், இந்தியாவில் இந்தியைவிட தெலுங்கு சினிமாதான் முதலிடத்தில் உள்ளது. டப்பிங் செய்யப்படும் பிராந்திய மொழிப்படங்கள் இந்தியா முழுவதும் வெளியிடப்படவில்லை.
ஆனால், இந்தி சினிமா ஏகபோகம் பெறுகிறது. இது ஆபத்தானது என தெரிவித்துள்ள கங்கனா நேபோடிசம், போதைப்பொருள் என பல்வேறு பயங்கரவாதிகளிடம் இருந்து சினிமா துறையை நாம் காப்பாற்ற வேண்டும். இந்திய திரைப்படத்துறை என அழைக்கப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.