

சென்னை,
பிரபல நடிகை சதா தற்போது ஆழ்ந்த சோகத்தில் உள்ளார். விலைமதிப்பற்ற ஒருவரை இழந்துவிட்டதாக தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். சதாவின் அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சதாவின் தந்தை சையத் காலமானார். ஒரு வாரத்திற்கு முன்பு அவர் உயிரிழந்திருக்கும்நிலையில், சதா இந்த விஷயத்தை தாமதமாக வெளிப்படுத்தி இருக்கிறார். தந்தையுடனான தனது பிணைப்பை நினைவுகூர்ந்து சதா இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில், 'என் தந்தை இறந்து ஒரு வாரம் ஆகிறது.. ஆனால் ஒரு சகாப்தம் கடந்துவிட்டதைபோல் உணர்கிறேன். என் தந்தையாக இருப்பதில் பெருமைப்படுவதாக அவர் எல்லோரிடமும் சொல்வார். ஆனால் இன்று, அவருடைய மகளாக இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன். அவர் உண்மையிலேயே விலைமதிப்பற்ற மனிதர். "மிஸ் யூ அப்பா," இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.
2002-ம் ஆண்டு ஜெயம் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான சதா, விரைவில் முன்னணி கதாநாயகியானார். அந்நியன், பிரியசகி, எதிரி, உன்னாலே உன்னாலே போன்ற படங்களில் நடித்தார்.
தற்போது படங்களில் இருந்து விலகி இருக்கும் சதா, ஒரு வனவிலங்கு புகைப்படக் கலைஞராக மாறிவிட்டார். அது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகிறார்.
View this post on Instagram