

திருவனந்தபுரம்
ஆபாசமாக பேசியதாக நடிகை அமலாபால் அளித்த புகாரின் அடிப்படையில் தொழிலதிபர் அழகேசன் என்பவர் நேற்று கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் மேலும் ஒரு நடிகை ஓடும் ரெயில் பாலியல் தொல்லைக்கு ஆளானார். அவரின் புகாரில் பேரில் அந்தநபர் கைது செய்ப்பட்டார்.
நடிகை சனுஷா கேரளத்தின் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள நீலேஸ்வரத்தில் பிறந்தவர். வினயன் இயக்கிய நாளை நமதே என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்தார். பின்னர், திலீப் நாயகனாக நடித்த மிஸ்டர் மருமகன் என்ற மலையாளத் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார்.
மேலும், ரேணிகுண்டா, பீமா, அலெக்ஸ் பாண்டியன், உள்ளிட்ட பல்வேறு தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், இவர் விரைவு ரயிலில் கன்னூரில் இருந்து திருவனந்தபுரம் சென்று கொண்டிருந்தபோது ஆண்டோ போஸ் என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது. இதைதொடர்ந்து சனுஷா டிடிஆரிடம் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து டிடிஆர் போலீசாரிடம் தகவல் தெரிவித்தார். தகவலறிந்து வந்த போலீசார் பாலியியல் தொந்தரவு கொடுத்த நபரை அதிரடியாக கைது செய்தனர். அந்த நபர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என கூறப்படுகிறது.