அருமையான மனிதர் சரத்பாபுவை நான் இழந்திருக்கிறேன் - நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்

அருமையான மனிதர் சரத்பாபுவை நான் இழந்திருக்கிறேன் என சரத்பாபு மறைவிற்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அருமையான மனிதர் சரத்பாபுவை நான் இழந்திருக்கிறேன் - நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்
Published on

சென்னை,

1973-ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகிற்கு நடிகராக அறிமுகமானவர் சரத்பாபு. இவர் 1977-ஆம் ஆண்டு இயக்குனர் கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளியான 'பட்டின பிரவேசம்' திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் கவனம் செலுத்தினார்.இவர் ரஜினிகாந்துடன் முத்து, அண்ணாமலை, போன்ற படங்களில் இணைந்து நடித்துள்ளார். இந்த படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. மேலும் பல முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார். இதுவரை 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல் போன்ற முக்கிய உறுப்புகளை பாதிக்கும் செப்சிஸ் நோயால் பாதிக்கப்பட்ட சரத்பாபு ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இவரது மறைவுக்கு அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

இன்று என்னுடைய நெருங்கிய நண்பர், அருமையான மனிதர் சரத்பாபுவை நான் இழந்திருக்கிறேன். ஈடுகட்ட முடியாத இழப்பு. அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும் என நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com