ஊரடங்கின் போது ரூ. 2 ஆயிரத்திற்கு வேலை செய்தேன் - நடிகை சரிகா வேதனை

ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு நடிப்புக்கு திரும்பிய சரிகா, கொரோனா தொற்று ஊரடங்கின் போது தனக்கு ஏற்பட்ட பிரச்சினைகளை கூறி உள்ளார்.
ஊரடங்கின் போது ரூ. 2 ஆயிரத்திற்கு வேலை செய்தேன் - நடிகை சரிகா வேதனை
Published on

மும்பை

நடிகை சரிகா 'மாடர்ன் லவ் மும்பை' என்ற வெப் சீரிஸுடன் மீண்டும் நடிப்புக்கு திரும்ப உள்ளார்.அலங்கிரிதா ஸ்ரீவஸ்தவா இயக்கிய, 'மாடர்ன் லவ்: மும்பை' என்ற தொகுப்பில், 'மை பியூட்டிபுல் ரிங்கில்ஸ்' என்ற குறும்படத்தில் சரிகா நடித்துள்ளார்,

ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்புக்குத் திரும்பிய சரிகா, கொரோனா தொற்று ஊரடங்கின் போது தனக்கு ஏற்பட்ட பிரச்சினைகளை கூறி உள்ளார்.

இதுகுறித்து சரிகா அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:-

எனக்கு வாழ்க்கையை வீணாக்கிக் கொண்டு இருக்கிறோம் என்று தோன்றியது. தினமும் காலையில் தூங்கி எழுகிறோம். நாம் நினைத்த வேலை எதுவும் நடப்பதில்லை. மீண்டும் இரவு தூங்குவோம். எனவே இந்த ஒரே மாதிரியான வாழ்க்கை சுழற்சியில் இருந்து ஒரு ஆண்டு ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும் என நினைத்தேன்.

வித்தியாசமாக ஏதாவது முயற்சிசெய்யலாம் என யோசித்தேன். ஆனால் ஒரு ஆண்டு ஓய்வு என நான் நினைத்தது 5 ஆண்டுகள் ஆகிவிட்டது. கொரோனா வந்தது. ஊரடங்கும் வந்தது .கையில் இருந்த பணமெல்லாம் தீர்ந்து கஷ்டம் ஏற்பட்டது.

இதனால் மேடை நாடகங்களில் நடித்தேன். அதில் ஒரு நாளைக்கு 2 ஆயிரம் ரூபாய்தான் கிடைத்தது. எனவே மீண்டும் சினிமாவில் நடிக்க முடிவு செய்துள்ளேன் என கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com