இணையத்தில் வைரலாகும் சுருதிஹாசனின் குழந்தை பருவ புகைப்படம்

சுருதிஹாசனின் குழந்தை பருவ புகைப்படம் இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது.
Shruti Haasan shares UNSEEN childhood PIC with dad Kamal Haasan and mom Sarika; her cute smile is unmissable
Published on

சென்னை,

கமல்ஹாசனின் மகள் என்ற அடையாளத்துடன் சினிமாவுக்கு வந்தவர் சுருதிஹாசன். தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். மேலும், சில படங்களில் பாடல்களும் பாடியுள்ளார்.

கடைசியாக இவர் நடித்த படம் சலார். இப்படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கி இருந்தார். இந்த படத்தில் 'பாகுபலி' திரைப்படத்தில் நடித்திருந்த பிரபாஸ் கதாநாயகனாக நடித்தார். கே.ஜி.எப். திரைப்படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் 'சலார்' படத்தையும் தயாரித்தது. கடந்த வருடம் டிசம்பர் 22-ம் தேதி இப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்நிலையில், சுருதிஹாசனின் குழந்தை பருவ புகைப்படம் இணையத்தில் பரவியுள்ளது. அதில் சுருதிஹாசன் தனது தந்தை கமல்ஹாசன் மற்றும் தாய் சரிகாவுடன் இருக்கிறார். தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. விரைவில் இவர் நடித்துள்ள இந்தியன் 2 மற்றும் கல்கி 2898 ஏ.டி ஆகிய படங்கள் திரைக்கு வரவுள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com