விஜயகாந்த் படத்தின் கதையா? ஷாருக்கானின் 'ஜவான்' இந்தி படம் மீது புகார்

அட்லி இந்தியில் இயக்கும் ஜவான் படம் விஜயகாந்த் நடிப்பில் வெளியான பேரரசு படம் கதையின் தழுவல் என்று வலைத்தளத்தில் தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விஜயகாந்த் படத்தின் கதையா? ஷாருக்கானின் 'ஜவான்' இந்தி படம் மீது புகார்
Published on

தமிழில் ராஜாராணி, தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கி பிரபலமான அட்லி தற்போது இந்தியில் ஜவான் படத்தை டைரக்டு செய்து வருகிறார்.

ஜவான் படத்தில் ஷாருக்கான் கதாநாயகனாகவும் நயன்தாரா நாயகியாகவும் நடிக்கின்றனர். விஜய்சேதுபதி வில்லனாக வருகிறார். இதில் விஜய் கவுரவ தோற்றத்தில் நடித்து இருக்கிறார். படத்தை அடுத்த வருடம் ஜூன் மாதம் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர். இந்த நிலையில் ஜவான் படம் சர்ச்சையில் சிக்கி உள்ளது. இந்த படம் விஜயகாந்த் நடிப்பில் வெளியான பேரரசு படம் கதையின் தழுவல் என்று வலைத்தளத்தில் தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். ''ஜவான் படம் பேரரசு படத்தின் கதை என்று வெளியாகி உள்ள தகவல் குறித்து தயாரிப்பாளர் சங்கம் விசாரிக்க வேண்டும்" என்று புகார் மனுவில் குறிப்பிட்டு உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே அட்லி இயக்கிய ராஜா ராணி படம் மௌனராகம் சாயலிலும், மெர்சல் படம் மூன்று முகம் படம் சாயலிலும் இருந்ததாக விமர்சனங்கள் கிளம்பின. இப்போது அவரது ஜவான் இந்தி படமும் சர்ச்சையில் சிக்கி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com