மணலில் புதைந்த தமன்னா - வைரல் புகைப்படம்..!

மணலில் புதைந்த தமன்னாவின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மணலில் புதைந்த தமன்னா - வைரல் புகைப்படம்..!
Published on

சென்னை,

தமிழில் கேடி படத்தின் மூலம் அறிமுகமான நடிகை தமன்னா, தனுஷுடன் படிக்காதவன், கார்த்தியுடன் பையா, சிறுத்தை, சூர்யாவுடன் அயன், விஜய்யுடன் சுறா, அஜித்துடன் வீரம் உள்ளிட்ட வரிசையான ஹிட் படங்களில் நடித்து பிரபலமானார்.

தொடர்ந்து தெலுங்கு, இந்தி என வரிசையாக பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பெரும் ரசிகர் கூட்டத்தையே உருவாக்கி வைத்துள்ளார். சமீபத்தில் போலா சங்கர், ஜெயிலர், லஸ்ட் ஸ்டோரிஸ் 2 ஆகிய படங்கள் வெளியாகின.

இந்நிலையில், நடிகை தமன்னா சில தினங்களுக்கு முன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், மணலில் முழு உடலும் புதைந்தவாறு ஒரு புகைப்படத்தை வெளியிட்டார். தமன்னாவா இப்படி என ரசிகர்கள் அதை பார்த்து ஷாக் ஆகினர். இந்த புகைப்படத்துக்கு தமன்னா ரசிகர்கள், இது ஒருவகையான தியானம் என்றும், இதனால் மனம் மற்றும் உடல் இலகுவாகும் என்றும் நகைச்சுவையாக கருத்து தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com