கதாநாயகியான ஜீவிதா மகள் ஷிவானி

ஜீவிதா மகள் ஷிவானி கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
கதாநாயகியான ஜீவிதா மகள் ஷிவானி
Published on


நட்சத்திர தம்பதிகளான ராஜசேகர்-ஜீவிதா மகள் ஷிவானி கதாநாயகியாக அறிமுகமாகி உள்ளார். அவர் நடிக்கும் தெலுங்கு படத்தின் படபூஜை ஐதராபாத்தில் நடந்தது. பாகுபலி டைரக்டரான ராஜமவுலி விழாவில் கலந்து கொண்டு கிளாப் அடித்து படப்பிடிப்பை தொடங்கி வைத்தார்.

இந்தியில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய 2 ஸ்டேட்ஸ் படம் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்படுகிறது. இந்த படத்தில்தான் ஷிவானி கதாநாயகியாக நடிக்கிறார். கதாநாயகனாக ஆத்விகேஷ் நடிக்கிறார். வெங்கட் டைரக்டு செய்கிறார்.

கதாநாயகியாக நடிப்பது குறித்து ஷிவானி கூறும்போது, சினிமாவில் முதன்முதலாக சவாலான கதாபாத்திரத்தில் அறிமுகமாக வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. இயக்குனர் வெங்கட் சொன்ன கதை மிகவும் பிடித்ததால் நடிக்க ஒப்புக்கொண்டேன். நான் நடிகையாவதற்கு சம்மதம் தெரிவித்த எனது பெற்றோர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். படக்குழுவினர் என்னை இளவரசிபோல் பார்த்துக்கொள்கிறார்கள். இந்த படத்துக்கு பிறகு சினிமாவில் நிரந்தர இடம் கிடைக்கும் என்று நம்புகிறேன் என்றார்.

ஷிவானியின் தாய் ஜீவிதா 1980-களில் தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com