திருமணம் முறிந்தது... டி.வி. நடிகரை காதலித்து மணந்த நடிகை புகார்

திருமணம் முறிந்தது... டி.வி. நடிகரை காதலித்து மணந்த நடிகை புகார்
Published on

பிரபல சின்னத்திரை நடிகை சம்யுக்தா, சக நடிகர் விஷ்ணு காந்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் மண வாழ்க்கை இரண்டே மாதத்தில் முறிந்துள்ளது. இருவரும் பிரிந்துவிட்டதாக அறிவித்து உள்ளனர். அதோடு ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்கள்.

சம்யுக்தா கூறும்போது, "விஷ்ணு காந்த் எனக்கு செக்ஸ் தொல்லை கொடுத்தார். எப்போதும் அதே நினைப்பிலேயே இருந்தார். ஒரு மனைவியை எப்படி நடத்த வேண்டும் என்று அவருக்கு தெரியவில்லை. ஆபாச வீடியோக்களை பார்த்து அதுமாதிரி நடந்து கொள்ள சொல்வார். படுக்கை அறையில் கேமரா வைக்கலாம் என்றார். என்னை வேறுவிதமாகவே நடத்தினார்.

நான் ஒரு மிஷினாகவே அவருக்கு தெரிந்தேன். ஒரு பொம்மை மாதிரியே என்னை பார்த்தார். அவரது விருப்பத்துக்கு நான் ஒத்துழைக்கவில்லை என்றால் வேறு மாதிரி நடத்துவார். விஷ்ணுகாந்த் என்னையும், என் பெற்றோரையும் மரியாதையாக நடத்தியது இல்லை. இதனாலேயே அவரை விட்டு பிரிந்தேன்'' என்று கூறியுள்ளார். இது பரபரப்பாகி உள்ளது.

விஷ்ணு காந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒருவரை நம்பி தனது திருமண வாழ்க்கையை தொடங்கிய சில நாட்களிலேயே அந்த பொய்யான மற்றும் நரக வாழ்க்கையில் இருந்து என்னை காப்பாற்றிய இறைவனுக்கும், இயற்கைக்கும் நன்றி. எனக்கு மிகவும் ஆறுதலாக இருந்த அனைத்து உள்ளங்களுக்கும் மற்றும் என் மீது நம்பிக்கை வைத்து ஆதரவு அளித்த மக்களுக்கும் நன்றி'' என குறிப்பிட்டு உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com