‘விஸ்வரூபம்–2’ படத்துக்காக கமல்ஹாசன் எழுதிய பாடல்

கமல்ஹாசன் இயக்கி நடித்துள்ள ‘விஸ்வரூபம்–2’ படம் ஆகஸ்டு 10–ந் தேதி திரைக்கு வருகிறது.
‘விஸ்வரூபம்–2’ படத்துக்காக கமல்ஹாசன் எழுதிய பாடல்
Published on

விஸ்வரூபம்2 படத்தில் கமல்ஹாசன் நானாகிய நதிமூலமே என்று தொடங்கும் முழு பாடலை எழுதி பாடியுள்ளார். அவருடன் இணைந்து தேவன், கார்த்திக் ஆகியோர் இந்த பாடலை பாடியிருக்கிறார்கள். அந்த பாடல் வருமாறு:

நானாகிய நதி மூலமே... தாயாகிய ஆதாரமே... எனை தாங்கிய கருக்குடம். இணையேயிலா திருத்தலம்... அனுதினம் உனை நினைந்திருக்கிறேன்... அனுதினம் உனை நினைந்திருக்கிறேன்... உன்போல நான் உயிரானதும் பெண் என்ற நான் தாயானதும் பிறந்த பயனால் உனை பெறும் சிறந்த பெருமை நிகழ்ந்ததும் அனுதினமும் நான் நினைந்திருக்கிறேன்... அனுதினமும் நான் நினைந்திருக்கிறேன்...

அம்மாவும் நீ அப்பாவும் நீ அன்பால் எனை ஆண்டாளும் நீ... பிறந்த பயனாய் உனைப்பெறும் சிறந்த பெருமை நிகழ்ந்ததும்... அனுதினமும் நான் நினைந்திருக்கிறேன். உன் மனதின் சாயலுள்ள பெண் உருவைத் தேடினேன். பழங்கனவை காணலியே. கண்கலங்க காண்கிறேன்... பழையபடி நினைவுகள் திரும்பிடும் பிறந்தமடி சாய்ந்திடக் கிடைத்திடும் நாள் வருமோ... திருநாள் வருமோ...

இவ்வாறு கமல்ஹாசன் எழுதி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com