திரைப்படமாக உருவாகும் சிலியன் மர்பியின் பீக்கி பிளைண்டர்ஸ்

இணையத்தொடராக வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற பீக்கி பிளைண்டர்ஸ் திரைப்படமாக உருவாக உள்ளது.
Tommy Shelby returns: Cillian Murphy confirmed for 'Peaky Blinders' movie by Netflix
Published on

சென்னை,

சிலியன் மர்பி நடிப்பில் கடந்த 2013லம் ஆண்டு வெளியான இணையத்தொடர் பீக்கி பிளைண்டர்ஸ். முதல் உலகப் போருக்கு அடுத்து தொடங்கும் கதையாக உருவாக்கப்பட்ட இந்த தொடர் மிகவும் வரவேற்பு பெற்றது.

இந்தத் தொடரில் வெளியான பாடல்கள் வசனங்கள் அனைத்தும் மிகவும் புகழ் பெற்றது. தற்போது இதனை திரைப்படமாக எடுக்கும் முடிவினை நெட்பிளிக்ஸ் அறிவித்துள்ளது. இதிலும் சிலியன் மர்பிதான் நாயகனாக டாமி ஷெல்பி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

டாம் ஹார்பர் இயக்கும் இந்தப் படத்தின் கதையை ஸ்டீவன் நைட் எழுதியுள்ளார். இதனை நெட்பிளிக்ஸ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ஓப்பன்ஹெய்மர் திரைப்படத்துக்காக நடிகர் சிலியன் மர்பி ஆஸ்கர் விருது வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com