"எனது ஆடையுடன் போட்டியிட முடியாது" சன்னி லியோனுக்கு சவால் விடும் உர்பி ஜாவித்

பல்வேறு தரப்பினர் தொடர்ந்து அவரை விமர்சனம் செய்தாலும் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் அவர் தொடர்ந்து தனது போட்டோ மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் உர்பி.
"எனது ஆடையுடன் போட்டியிட முடியாது" சன்னி லியோனுக்கு சவால் விடும் உர்பி ஜாவித்
Published on

மும்பை

பிரபல டிவி நடிகையான உர்பி ஜாவித் இந்தி பிக் பாஸ் ஓடிடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஓவர் நைட்டில பாப்புலர் ஆனார்.

தனது பிரபலத்தை அப்படியே விட்டு விடக் கூடாது என நினைத்த உர்பி ஜாவித் தொடர்ந்து வித விதமான உச்சகட்ட கவர்ச்சி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

ஆடிக்கடி டாப்லெஸ் போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிடும் உர்பி,புதிய புதிய ஐடியாவுடன் முன்னழைகை மறைக்க மொபைல் போன் ,டேப் டிரெஸ்,ஒயின் கிளாஸ் என ஹார்ட் பீட்டை எகிற வைப்பார்.

பல்வேறு தரப்பினர் தொடர்ந்து அவரை விமர்சனம் செய்தாலும் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் அவர் தொடர்ந்து தனது போட்டோ மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், தற்போது எந்தவொரு ஆடையும் அணியாமல் உச்சகட்ட கவர்ச்சியில் வெறும் சிகப்பு நிற டேப்களை தாறுமாறாக சுவற்றுடன் சேர்த்து ஒட்டிக் கொண்டு இருக்கும் புதிய வீடியோவை வெளியிட்டு உள்ளார்.

ஆடை வடிவமைப்புக்காக சன்னி லியோன் உர்பி ஜாவித்தை பாராட்டி உள்ளார்.

உர்பி உங்களின் ஆடை அற்புதமானது மற்றும் கடற்கரை உடைகள் உங்களுக்கு முற்றிலும் சரியானது. உங்களின் உடைகளை நான் விரும்புகிறேன், இது அழகாக இருக்கிறது என கூறினார்.

இதற்கு பதில் அளித்த உர்பி'எனது தனித்துவமான ஆடை உணர்விற்காக நான் அறியப்பட்டவள். நீங்கள் என்னுடன் போட்டியிடலாம், ஆனால் எனது ஆடையுடன் நீங்கள் போட்டியிட முடியாது, ஏனெனில் அது எப்போதும் யாருடைய கற்பனைக்கும் அப்பாற்பட்டது என கூறினார்.

View this post on Instagram

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com