

மும்பை,
கடந்த ஆண்டு வெளியான 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படத்தை விவேக் அக்னிஹோத்ரி இயக்கியிருந்தார். பல்வேறு சர்ச்சைகளுக்கிடையே வெளியான இந்த படத்திற்கு பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் வரிவிலக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் 'தி காஷ்மீர் ஃபைல்ஸ் அன்ரிப்போர்டட்' என்ற வெப் தொடர் வெளியாக உள்ளது. இந்த தொடருக்கான டீசர் வீடியோவை இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
இந்த வீடியோவில் கமெண்ட் செய்த நெட்டிசன் ஒருவர், "நேரத்தை வீணடிக்காதீர்கள். உங்களுக்கு துணிச்சல் இருந்தால் இருந்தால், 'மணிப்பூர் ஃபைல்ஸ்' படத்தை இயக்குங்கள்" என்று பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள விவேக் அக்னிஹோத்ரி, "என் மேல் நம்பிக்கை வைத்ததற்கு நன்றி. எல்லா படத்தையும் நான் மட்டும் தான் எடுக்க வேண்டுமா? உங்கள் 'இந்தியா' அணியில் துணிச்சலான இயக்குனர் இல்லையா?" என்று பதிவிட்டுள்ளார்.
Vivek Ranjan Agnihotri (@vivekagnihotri) July 21, 2023 ">Also Read: