காதலில் யாஷிகா ஆனந்த்?

தமிழில் கவலை வேண்டாம் படம் மூலம் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். கவர்ச்சியாக நடித்த இருட்டு அறையில் முரட்டு குத்து படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது.
காதலில் யாஷிகா ஆனந்த்?
Published on

தமிழில் கவலை வேண்டாம் படம் மூலம் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். கவர்ச்சியாக நடித்த இருட்டு அறையில் முரட்டு குத்து படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. பாடம், துருவங்கள் பதினாறு, மூக்குத்தி அம்மன் படங்களிலும் நடித்து இருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றும் பிரபலமானார். ஏற்கனவே நடிகர் மகத்தை யாஷிகா ஆனந்த் காதலிப்பதாக கிசுகிசுக்கள் வந்தன. அதனை மறுத்தார். தற்போது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தள பக்கத்தில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்ற பாலாஜியுடன் யாஷிகா இணைந்து இருப்பது போன்ற புகைப்படம் வலைத்தளத்தில் வெளியானது. இருவரும் ஜோடியாக சுற்றுவதாகவும் பேசப்பட்டது. இதனால் இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் பரவி வந்தன. இதற்கு விளக்கம் அளித்துள்ள யாஷிகா, நாங்கள் இருவரும் நண்பர்களாக பழகினோம். அவர் வளர்ச்சியில் சந்தோஷப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com