

சென்னை,
கொரோனா ஊரடங்கால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ள நிலையில் திரைப்பிரபலங்களில் சிலர் வீட்டில் இருந்தபடியே ஆல்பம், குறும்படம் என நடித்து வருகின்றனர். இந்தநிலையில் மக்கள் நீதி மய்யத்தின் மகளிரணி ஒருங்கிணைப்பாளரும், நடிகையுமான ஸ்ரீபிரியா இந்த ஊரடங்கு காலத்தில் யசோதா எனும் குறும்படத்தை இயக்கி நடித்துள்ளார். செல்போன் மூலம் இந்த குறும்படம் எடுக்கப்பட்டுள்ளது.
இதில் ஸ்ரீபிரியாவோடு இணைந்து நடிகர்கள் நாசர், சிவகுமார் (சிவாஜி கணேசன் பேரன்) ஆகியோரும் நடித்துள்ளனர். படத்தொகுப்பு பணிகளை ரூபன் மேற்கொண்டுள்ளார். க்ரிஷ் பின்னணி இசையமைக்க, நிருத்யா பிள்ளை பாடியுள்ளார்.
இந்த குறும்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை டுவிட்டரில் வெளியிட்டுள்ள கமல்ஹாசன், இதுவொரு சுவாரசியமான முயற்சி யசோதா குறும்படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிடுவதில் மகிழ்ச்சி. இந்தப் படத்தைப் பார்க்க ஆவலாக உள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.