அதாகப்பட்டது மகாஜனங்களே

‘அதாகப்பட்டது மகாஜனங்களே’ ஒரு இசை கலைஞனின் கதை
அதாகப்பட்டது மகாஜனங்களே
Published on

நகைச்சுவை மற்றும் குணச்சித்ர நடிகர் தம்பிராமய்யாவின் மகன் உமாபதி, அதாகப்பட்டது மகாஜனங்களே என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். படத்தை பற்றி டைரக்டர் ஆர்.இன்பசேகர் கூறுகிறார்:-
வாழ்க்கையில் ஒரு பிரச்சினை வந்தால், நாம் எல்லோரும் இதற்கு முடிவு இப்படித்தான் இருக்கும்.

நாம் எப்படியும் தப்பித்து விடலாம் என்று யோசித்து வைத்திருப்போம். ஆனால், விதிவசத்தால் எதிர்பாராத முடிவு வரும்போது சிரிப்பதா, அழுவதா? என்று தெரியாது. இதைத்தான் கதையாக ரொம்ப மென்மையான வழியில், நகைச்சுவையாக படத்தில் சொல்லியிருக்கிறேன்.
மேடை கச்சேரிகளில் யார் கவனத்தையும் ஈர்க்காமல் ஓரமாக உட்கார்ந்து வாசிப்பாரே அப்படி ஒரு இசைக்கலைஞன்தான் இந்த படத்தின் நாயகன். இதுபோன்ற அசல் தோற்றத்துடன் உமாபதி என்னிடம் வந்தார். பார்த்ததும் பிடித்து தேர்வான பின்தான் அவர் தம்பிராமய்யாவின் மகன் என்ற விவரம் தெரியவந்தது.

உமாபதியுடன் ரேஷ்மா ரத்தோர், கருணாகரன், பாண்டியராஜன், நரேன், மனோபாலா, யோக் ஜேப்பி ஆகியோரும் நடித்து இருக்கிறார்கள். யுகபாரதி எழுதிய பாடல்களுக்கு டி.இமான் இசையமைத்து இருக்கிறார். சிவரமேஷ்குமார் தயாரித்து இருக்கிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com