ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்

‘ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்’ என்ற பெயரில் ஒரு புதிய படம் தயாரிக்கிறார்.
ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்
Published on

ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் படத்தில் அதர்வா ஜோடியாக 4 கதாநாயகிகள் தெய்வ வாக்கு, அரவிந்தன், ராசய்யா, அரவாண் உள்பட பல படங்களை தயாரித்த அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா அடுத்து, ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் என்ற பெயரில் ஒரு புதிய படம் தயாரிக்கிறார். இதில், அதர்வா கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக ரெஜினா கசன்ட்ரா, பிரணிதா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதீதி போஹங்கர் ஆகியோர் நடிக்கிறார்கள்.

இவர்களுடன் சூரி, நான் கடவுள் ராஜேந்திரன், மயில்சாமி, சோனியா போஸ் வெங்கட் மற்றும் பலரும் நடிக்கிறார்கள். யுகபாரதி பாடல்களை எழுத, டி.இமான் இசையமைக்கிறார். ஸ்ரீசரவணன் ஒளிப்பதிவு செய்கிறார். கதை-திரைக்கதை-வசனம் எழுதி டைரக்டு செய்கிறார், ஓடம் இளவரசு. டி.சிவாவுடன் இணைந்து 2எம்பி நிறுவனம் சார்பில் ரகுநாதன், ஆர்.சந்திரசேகர், ஆர்.சரவணகுமார் ஆகியோர் தயாரிக்கிறார்கள்.

ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் படத்தை பற்றி டைரக்டர் ஓடம் இளவரசு கூறியதாவது:- காதலுக்கும், நகைச்சுவைக்கும் முக்கியத்துவம் கொடுத்து இந்த படம் உருவாகிறது. பெண்களின் முதல் காதல் அவர்கள் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அழுத்தமாகவும், உணர்வுப்பூர்வமாகவும், நகைச்சுவையாகவும் பதிவு செய்கிறோம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com