பிரபல பாடகர் நீரில் மூழ்கி பலி

பிரபல பஞ்சாபி பாடகர் மன்மீத் சிங். இவர் சுபி பாடல்கள் பாடி புகழ் பெற்றவர். சுபி பாடல்களால் பிரபலமான செய்ன் பிரதர் இசைக்குழுவிலும் இடம்பெற்று இருந்தார்.
பிரபல பாடகர் நீரில் மூழ்கி பலி
Published on

மன்மீத் சிங் தனது நண்பர்கள் சிலருடன் இமாசலபிரதேசத்தில் உள்ள தர்மசாலாவுக்கு சென்றார். அங்கு பல இடங்களை சுற்றிப்பார்த்து விட்டு கரேரி ஆற்றுப் பகுதிக்கு சென்றனர்.

அப்போது கனமழை பெய்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரேரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. மன்மீத் சிங் நண்பர்களுடன் ஆற்றின் கரையோரம் நின்று வெள்ளப்பெருக்கை பார்த்து ரசித்துக்கொண்டு இருந்தார். அப்போது மழைநீரில் வழுக்கி திடீரென்று ஆற்றுக்குள் விழுந்தார். மன்மீத் சிங்கை வெள்ளம் அடித்து சென்றது. கரையில் நின்றவர்கள் அலறி துடித்தார்க்ள. ஆனால் காப்பாற்ற முடியவில்லை. போலீசார் விரைந்து வந்து தீவிர தேடுதலுக்கு பிறகு கங்க்ரா மாவட்டத்தில் ஆற்றின் கரையோரத்தில் மன்மீத் சிங்கை பிணமாக மீட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com