

அரசியல்வாதி வேடத்தில் நடித்த துரை சுதாகருக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருந்தது.
எந்த வேடமாக இருந்தாலும் சரி, ரசிகர்கள் மனதில் நிற்கும் வேடமாக இருந்தால், நிச்சயம் நடிப்பேன் என்று கூறும் துரை சுதாகர், அடுத்து வரலட்சுமி சரத்குமார் கதாநாயகியாக நடிக்கும் டேனி படத்தில், போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார்.
எழில் இயக்கும் புதிய படத்திலும் இவர் நடித்து வருகிறார். தற்போது சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் புதிய படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார், துரை சுதாகர்!