நாயை அடிப்பது போல் என்னை அடித்தார் - கவர்ச்சி நடிகை குமுறல்

நடிகை கங்கனா ரணாவத் தொகுத்து வழங்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பூனம் பாண்டே பங்கேற்று கணவரால் தனக்கு நேர்ந்த கொடுமைகள் பற்றி பேசினார்.
நாயை அடிப்பது போல் என்னை அடித்தார் - கவர்ச்சி நடிகை குமுறல்
Published on

இந்தி பட உலகின் பிரபல கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே. இவரும், சாம் பாம்பே என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர் கோவாவுக்கு தேனிலவு சென்ற இடத்தில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. தன்னை அடித்து சித்ரவதை செய்ததாக கோவா போலீசில் கணவர் மீது பூனம் பாண்டே புகார் அளித்தார். இதையடுத்து சாம் பாம்பேவை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் தற்போது நடிகை கங்கனா ரணாவத் தொகுத்து வழங்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பூனம் பாண்டே பங்கேற்று கணவரால் தனக்கு நேர்ந்த கொடுமைகள் பற்றி பேசினார்.

பூனம் பாண்டே கூறும்போது, நான் சாம் பாம்பேவுடன் 4 வருடங்கள் தொடர்பில் இருந்தேன். அந்த 4 வருடங்களும் சரியாக தூங்கவில்லை. சாப்பிடவில்லை. தினமும் அவரிடம் அடிவாங்கினேன். யாருக்கும் போன் செய்யக்கூடாது என்று செல்போனை உடைத்தார். நாயை அடிப்பது போன்று என்னை அடித்தார். ஒரு அறைக்குள் வைத்து பூட்டினார். இதனால் பல முறை தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்தேன் என்றார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com