எல்கர் பரிஷத் வழக்கில் ஹனி பாபுக்கு ஜாமீன் மறுப்பு

புனே அருகே எல்கர் பரிஷத் வழக்கில் ஹனி பாபுக்கு ஜாமீன் மறுப்பு
எல்கர் பரிஷத் வழக்கில் ஹனி பாபுக்கு ஜாமீன் மறுப்பு
Published on

மும்பை,

புனே அருகே பீமா-கோரேகாவ் போர் நினைவு சின்னத்தில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியின்போது வன்முறை ஏற்பட்டது. இதில் ஒருவர் பலியானார். பலர் காயமடைந்தனர். இதற்கு முந்தைய நாள் நடந்த எல்கர் பரிஷத் மாநாட்டில் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதே காரணம் என குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் பலரை கைது செய்தனர். இதில் டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் ஹனி பாபுவும் அடங்குவார். இவர் நவிமும்பை தலோஜா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரது ஜாமீன் மனுவை என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டு நிராகரித்ததை எதிர்த்து அவர் மும்பை ஐகோர்ட்டில் கடந்த ஜூன் மாதம் முறையிட்டார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, அவருக்கு ஜாமீன் வழங்க என்.ஐ.ஏ. கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

"ஹனி பாபு தடை செய்யப்பட்ட சி.பி.ஐ. (மாவோயிஸ்ட்) அமைப்பை சேர்ந்தவர். இவர் நக்சலைட்டு இயக்கத்தை விரிவுப்படுத்த முயற்சி மேற்கொண்டார். மக்களால் தேர்வு செய்யப்பட்ட இந்திய அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போரிட்டு, அரசை கவிழ்க்க சதி செய்தார்" என்று தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து ஹனி பாபுவுக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com