சர்வதேச யோகா தினம்.. தமிழகத்தின் 15 நகரங்களில் சிறப்பு நிகழ்வு.. இன்றே முன்பதிவு செய்யுங்க..!

கோவை ஈஷா யோகா மையத்துடன் தினத்தந்தி, டிடி நெக்ஸ்ட் ஆகியவை இணைந்து 15 முக்கிய நகரங்களில் யோகா நிகழ்ச்சிகளை நடத்த இருக்கின்றன.
சர்வதேச யோகா தினம்.. தமிழகத்தின் 15 நகரங்களில் சிறப்பு நிகழ்வு.. இன்றே முன்பதிவு செய்யுங்க..!
Published on

உடல் ரீதியிலான பிரச்சினைக்கு மருந்துகள் பல இருக்கின்றன. ஆனால், மன ரீதியிலான பிரச்சினைக்கு ஒரே தீர்வு யோகா தான். இது இந்தியாவின் பழமையான கலைகளில் ஒன்று. உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதால், இன்றைக்கு 120 நாடுகளில் யோகா பயிற்றுவிக்கப்படுகிறது. உலக அளவில் இதன் முக்கியத்துவத்தை உணர்த்த ஆண்டுதோறும் ஜூன் 21-ந் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டும் வழக்கமான உற்சாகத்துடன் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் யோகா நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில், கோவை ஈஷா யோகா மையத்துடன் தினத்தந்தி, டிடி நெக்ஸ்ட் ஆகியவை இணைந்து, 'யோகா வாழ்க்கையை மாற்றும் ஒரு ஆரம்பம்' என்ற தலைப்பில் சென்னை, கோவை உள்பட 15 முக்கிய நகரங்களில் யோகா நிகழ்ச்சிகளை நடத்த இருக்கின்றன.

10 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் இதில் பங்கேற்கலாம். யோகா நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புவோர் https://www.dailythanthi.com/yoga-day-2025 என்ற இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளலாம். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com