

புதுடெல்லி,
உலக நாடுகளை பீதியில் ஆழ்த்தியுள்ள கொரோனா வைரஸ், இந்தியாவிலும் நாளுக்கு நாள் பாதிப்பை அதிகரித்து வருகிறது. இந்தியாவில் தற்போதைய நிலவரப்படி, கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1637 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், 132 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். இந்தத் தகவலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.