

ஐதராபாத்,
ஐதராபாத்தில் கருகலைப்பு செய்துக் கொண்ட மாணவி நேற்று உயிரிழந்துவிட்டார் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மாணவி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போது 5 மாத கர்ப்பிணியாக இருந்து உள்ளார். அவருடைய ஆண் நண்பருடன் மருத்துவமனைக்கு வந்து உள்ளார். மருத்துவமனையில் அவருக்கு கருகலைப்பு செய்யப்பட்டதும் உடல் நிலை மிகவும் மோசமாகி உள்ளது. இதனையடுத்து மற்றொரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளார், ஆனால் அவர் உயிரிழந்துவிட்டார் என மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது என போலீஸ் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக போலீஸ் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக மாணவியின் தந்தை போலீசில் புகார் கொடுத்து உள்ளார். மருத்துவர்கள் அலட்சியம் காரணமாகவே என்னுடைய மகள் உயிரிழந்துவிட்டாள் என அவர் குற்றம் சாட்டிஉள்ளார் என போலீஸ் தெரிவித்து உள்ளது.
இவ்விவகாரம் தொடர்பாக கருகலைப்புக்கு காரணமாக இருத்தல், கருகலைப்பு நோக்கத்துடன் உயிரிழப்பு ஏற்படுதல் மற்றும் ஏமாற்றுதல் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது என போலீஸ் அதிகாரி எஸ். முரளி கிருஷ்ணா கூறிஉள்ளார்.
முதல்கட்ட விசாரணையில் மாணவி அப்பகுதியை சேர்ந்த புகைப்பட கலைஞர் ஒருவருடன் நெருக்கம் கொண்டு இருந்தார் என தெரிகிறது. கருகலைப்பில் ஈடுபட்ட மருத்துவமனை டாக்டர் மற்றும் உயிரிழந்த மாணவியின் ஆண் நண்பரை போலீஸ் விசாரித்து வருகிறது.