அமர்நாத் யாத்ரீகர்கள் மீது தாக்குதல் நடத்திய 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

அமர்நாத் யாத்ரீகர்கள் மீது தாக்குதல் நடத்திய 3 தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.
அமர்நாத் யாத்ரீகர்கள் மீது தாக்குதல் நடத்திய 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
Published on

ஸ்ரீநகர்,

காஷ்மீர் மாநிலம் அனந்த் நாக் மாவட்டம் காசிகண்ட் பகுதியில் பாதுகாப்பு படையினர் ரோந்து வாகனம் அணி வகுத்து சென்றது. பேனிகோம் என்ற இடத்தில் வாகன அணிவகுப்பின் போது மறைந்து இருந்த தீவிரவாதிகள் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் ஒரு ராணுவ வீரர் பலியானார். மற்றொரு வீரர் காயம் அடைந்தார்.

இதை தொடர்ந்து தீவிரவாதிகள் பதுங்கி இந்த வீட்டை பாதுகாப்பு படையினர் குண்டு வைத்து தகர்த்தனர். அந்த பகுதியில் தீவிரவாதிகளை தேடும் வேட்டையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர்.

பாதுகாப்பு படை வீரர்களை பார்த்ததும் தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். ராணுவ வீரர்களும் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதை தொடர்ந்து ஜம்மு தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டது.

இன்று அதிகாலை 2 மணிவரை துப்பாக்கி சண்டை நீடித்தது. பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

சுட்டுக் கொல்லப்பட்ட அபுபுர்கான், அபுமாவியா ஆகிய 2 பேரும் பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் இயக்க தீவிரவாதிகள் ஆவார்கள். காஷ்மீரை சேர்ந்த யாவர் பாசிர் என்ற தீவிரவாதியும் இந்த தாக்குதல் சம்பவத்தில் பலியானார்.

தெற்கு காஷ்மீர் பகுதியில் அபு இஸ்மாயில் இறந்த பிறகு அபுபுர்கான் லஷ்கர் இயக்க தளபதியாக செயல்பட்டு வந்தார். சுட்டுக் கொல்லப்பட்ட இந்த 3 தீவிரவாதிகளும் அமர்நாத் யாத்ரீகர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் ஆவார்கள். கடந்த ஜூலை 10-ந்தேதி அமர்நாத் யாத்ரீகர்கள் மீது நடத்திய தாக்குதலில் 8 பக்தர்கள் பலியானார்கள். மேலும் இவர்கள் பல்வேறு தாக்குதலில் தொடர்புடையவர்கள். என் கவுண்டர் நடந்த இடத்தில் ரஷீத்அகமது என்ற தீவிரவாதியை பாதுகாப்பு படையினர் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com