இந்தியாவில் 425 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

நாட்டில் 2-வது நாளாக தொடர்ந்து 500-க்கு கீழ் கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

நாட்டில் 2-வது நாளாக தொடர்ந்து 500-க்கு கீழ் கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. நேற்று 425 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதுவரை 4 கோடியே 49 லட்சத்து 89 ஆயிரத்து 341 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து நேற்று 870 பேர் குணம் அடைந்தனர். இதுவரையில் குணம் அடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 44 லட்சத்து 52 ஆயிரத்து 223 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா மீட்பு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் நேற்று 448 ஆக குறைந்தது. இதையடுத்து, கொரோனா மீட்பு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை நேற்று காலை நிலவரப்படி 5,259 ஆக குறைந்துள்ளது. கொரோனா தொற்றினால் நேற்று 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் கேரளாவில் விடுபட்ட இறப்பும் அடங்கும். கொரோனாவில் இருந்து மீள முடியாமல் இந்தியாவில் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 859 ஆக உயர்ந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com