110 அடி ஆழ ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 4 வயது சிறுவன்; மீட்கும் முயற்சி தீவிரம்

மத்திய பிரதேசத்தில் 110 அடி ஆழ ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 4 வயது சிறுவனை மீட்க முயற்சிகள் நடந்து வருகின்றன.
110 அடி ஆழ ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 4 வயது சிறுவன்; மீட்கும் முயற்சி தீவிரம்
Published on

திவாஸ்,

மத்திய பிரதேசத்தின் திவாஸ் நகரில் உமரியா கிராமத்தில் ஒரு பெற்றோர் மதியம் வயல்வெளியில் பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்களது 4 வயது சிறுவன் அருகே விளையாடி கொண்டு இருந்துள்ளான்.

இந்நிலையில் சிறுவன் வயலில் இருந்த ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளான். இதுபற்றி தகவல் அறிந்து மீட்பு குழுவினர் அங்கு வந்துள்ளனர். அவர்கள் 40 அடி ஆழத்தில் சிக்கி இருந்த சிறுவனுக்கு சுவாசிக்க ஏற்ற வகையில் பிராண வாயு செலுத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து சிறுவனை மீட்கும் பணிகள் நடந்து வருகின்றன.

சிறுவன் விழுந்த குழிக்கு அருகே மற்றொரு குழி தோண்டப்பட்டு வருகிறது. இதற்காக ராணுவத்தின் உதவியும் கேட்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com