இந்தியாவில் 5 ஜி சேவை; அக்.1 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

புதுடெல்லியில் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை மொபைல் காங்கிரஸ் மாநாடு நடைபெறுகிறது.
இந்தியாவில் 5 ஜி சேவை; அக்.1 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
Published on

புதுடெல்லி,

அதிவேக இணைய வசதியை கொடுக்கும் 5 ஜி தொழில்நுட்பம் இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் முதல் பயன்பாட்டுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுடெல்லியில் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை மொபைல் காங்கிரஸ் மாநாடு நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி 5 ஜி சேவையை தொடங்கி வைக்கிறார்.

5ஜி சேவையைப் பெறுத்தவரையில் அலைவரிசை ஏலம் அனைத்தும் முடிந்து விட்டன. பெரும்பாலான அலைவரிசையை வாங்கிய ஜியே நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. ஏர்டெல் இரண்டாம் இடத்தில் உள்ளது. மேலும், குறைந்த விலையில் 5ஜி ஸ்மார்ட்பேனை கெண்டு வருவதற்கு முழுமுயற்சியில் ஜியே நிறுவனம் களம் இறங்கியுள்ளது. வரும் தீபாவளி முதல் 5 ஜி சேவை அறிமுகப்படுத்தப்படும் என்று ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com