

போபால்,
ஜிதேந்திர கோயல் தான் காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்காக, வேலை பார்த்த நிறுவனத்திலேயே ரூ.6 லட்சத்து 74 ஆயிரத்தை திருடினார்.
ஆனால் திடீரென வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்ளப் போவதாக சொல்லி, அவரை காதலி கை விட்டு விட்டார்.
இதில் விரக்தி அடைந்த அவர் திருடிய பணத்தில் ரூ.5 லட்சத்தை தீ வைத்து கொளுத்தினார்.
இதற்கிடையே பணத்தை திருடிய வழக்கில் அவர் போலீசிடம் சிக்கினார். அவரிடம் இருந்து எரிந்தும் எரியாமலும் இருந்த ரூபாய் நோட்டுகளை போலீசார் கைப்பற்றினர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் இந்த தகவல்கள் அம்பலத்துக்கு வந்தன. மேலும், அவர் தற்கொலைக்கு திட்டமிட்டு இருந்ததும் தெரியவந்து உள்ளது. போலீசில் சிக்கியதால் தற்கொலையில் இருந்து அவர் தப்பினார்.