

மெயின்புரி,
டெல்லியில் இருந்து வாரணாசிக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு பஸ் புறப்பட்டு சென்றது. அந்த பஸ் உத்தரபிரதேச மாநிலம் கர்கல் பகுதியில் ஆக்ரா-லக்னோ எக்ஸ்பிரஸ் சாலையில் சென்றபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, தாறுமாறாக ஓடி அந்த வழியாக சென்ற லாரி மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை தற்போது 8 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்த விபத்தில் 25-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர்.
தகவல் அறிந்து வந்த போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில், 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.