அகஸ்டா வெஸ்ட்லேண்ட் வழக்கில் சோனியா காந்தியை சிக்கவைத்தால் விட்டுவிடுவதாக சிபிஐ கூறியது - கிறிஸ்டியன் மைக்கேல்

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் வழக்கில் சோனியா காந்தியை சிக்கவைத்தால் விட்டுவிடுவதாக சிபிஐ கூறியது என இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல் கூறியுள்ளார். #AgustaWestland #SoniaGandhi #CBI
அகஸ்டா வெஸ்ட்லேண்ட் வழக்கில் சோனியா காந்தியை சிக்கவைத்தால் விட்டுவிடுவதாக சிபிஐ கூறியது - கிறிஸ்டியன் மைக்கேல்
Published on

புதுடெல்லி,

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் 2010-ம் ஆண்டு இத்தாலி நாட்டின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து இங்குள்ள முக்கிய பிரமுகர்களின் பயன்பாட்டுக்காக 12 அதிநவீன ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு ரூ.3,600 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதில், ரூ.362 கோடி லஞ்சப் பணம் இந்தியர்களுக்கு இடைத்தரகர்கள் மூலம் கைமாறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக சிபிஐ விசாரணையை மேற்கொண்டு வருகிறது.

இவ்வழக்கு விசாரணை தொடர்பான செய்திகள் எதுவும் வெளியாகாத நிலையில் இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல் துபாயில் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவருக்கு துபாய் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது என செய்தி வெளியாகியது.

இந்நிலையில் இந்தியா டுடேவிற்கு பேட்டியளித்து பேசிய கிறிஸ்டியன் மைக்கேல், இந்த வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும், அகமது படேலையும் சிக்க வைக்க சிபிஐ கேட்டுக்கொண்டது. அவர்களுடைய பெயரை நான் இணைத்து கூறியிருந்தால் என்னை விட்டு இருப்பார்கள். இந்திய அதிகாரிகள் என்னிடம் இதுதொடர்பாக பேசிய சிசிடிவி காட்சிகளை என்னால் பெற முடியும். சிபிஐ பொய் சொல்கிறது; எங்களுக்குள் மூன்று முறை சந்திப்பு நடந்துள்ளது, இதனை நிரூபிக்க என்னிடம் 6 சாட்சிகள் உள்ளது என கூறியுள்ளார்.

சோனியா காந்தியை தனிப்பட்ட முறையில் நன்றாக தெரியும் என்று கிறிஸ்டியன் மைக்கேலை தவறான வாக்குமூலம் கொடுக்க சிபிஐ முயற்சி செய்துள்ளது என அவருடைய வழக்கறிஞர் குற்றம் சாட்டியுள்ளார்.

முன்னதாக கிறிஸ்டின் மைக்கேலிடம் ஐக்கிய அரபு எமிரெட்ஸில் வைத்து விசாரிக்கவில்லை என்று சிபிஐ தெரிவித்தது. இதுதொடர்பாக அவர் பேசுகையில், சோனியா காந்தியின் பெயரை இணைத்து வாக்குமூலம் கொடுக்க இந்திய மற்றும் ஐக்கிய அரபு எமிரெட்ஸ் அதிகாரிகள் வற்புத்தியுள்ளனர் என குற்றம் சாட்டியுள்ளார். ஆனால் சிபிஐ இந்த குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளது, ஐக்கிய அரபு எமிரெட்ஸில் வைத்து விசாரிக்கவில்லை என்று தெரிவித்துள்ளது. கிறிஸ்டின் மைக்கேலை கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரியில்தான் கைது செய்தோம், அவருடைய வழக்கறிஞர் கூறியது போன்று இவ்வாண்டு கைது செய்யவில்லை என்றும் சிபிஐ தெரிவித்துள்ளது.

ஏற்கனவே காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஜூலை 19-ம் தேதி காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ராஜீவ் சுக்லா பேசுகையில், அகஸ்டா வெஸ்ட்லேண்ட் வழக்கில் இரண்டு தினங்களுக்கு முன்னர் கிறிஸ்டியன் மைக்கேல் துபாயில் கைது செய்யப்பட்டார். இப்போது மோடி அரசு மற்றும் அதனுடைய விசாரணை முகமைகள் சோனியா காந்தியின் பெயரையும் சேர்க்கும் வகையில் போலியான வாக்குமூலத்தை கொடுக்க கிறிஸ்டியன் மைக்கேலை கட்டாயப்படுத்தி வருகிறது என்று அவருடைய வழக்கறிஞர் ரோஸ்மேரி பாத்ரிஸி தெளிவாக கூறியுள்ளார், என்று கூறியிருந்தார் என்பது குறுப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com