

சண்டிகார்,
பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி அனைத்து கட்சிகளும் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்து வருகிறது. இதில், சிரோமனி அகாலி தள கட்சி சார்பில் அதன் தலைவர் குர்பிரீத் சிங் பதால், பதின்டா மாவட்டத்தில் உள்ள 3 சட்டமன்ற தொகுதிக்கான வேட்பாளர்கள் பெயர்களை அறிவித்துள்ளார் என தலீத் சிங் ஜீமா டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.
அதன்படி, சிகந்தர் சிங் மாலுகாவுக்கு ராம்புரா பால் தொகுதியும், பிரகாஷ் சிங்குக்கு பாதின்டா கிராம தொகுதியும், தர்ஷன் சிங் கோட்பட்டாவுக்கு புச்சோ சட்டமன்ற தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே ராம்புரா பால் சட்டமன்ற தொகுதியில் சீட் ஒதுக்கப்பட்ட முன்னாள் அமைச்சரும், சீரோமனி அகாலி தள கட்சி தலைவருமான சிகந்தர் சிங் மாலுகா, தனக்கு இந்த தொகுதியில் போட்டியிட விருப்பமில்லை என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ராம்புரா பால் தொகுதிக்காக எனது மகன் குர்பிரீத் சிங் மலேகா கடந்த ஒரு ஆண்டாக உழைத்து வருகிறார் . எனவே இந்த தொகுதியில் போட்டியிட கட்சி நிர்வாகம் குர்பிரீத் சிங் மலேகாவுக்கு தான் வாய்ப்பு அளித்திருக்க வேண்டும். தன்னிடம் ஆலோசனை பெறாமல் இந்த தொகுதியை எனக்கு ஒதுக்கியுள்ளது. எனவே நான் இந்த தொகுதியில் போட்டியிட மறுக்கிறேன். எனது மகன் தான் இந்த தொகுதியில் போட்டியிட வேண்டும் என்றார்.