பெட்ரோல் விலை குறைக்கப்படும் என்று அமித் ஷா பேச்சுக்கு, ப.சிதம்பரம் டுவிட்டரில் கிண்டல்

பெட்ரோல் விலை குறைக்கப்படும் என்று அமித் ஷா பேச்சுக்கு, கச்சா எண்ணெயை இலவசமாக பெறப்போகிறார்களா? என்று ப.சிதம்பரம் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
பெட்ரோல் விலை குறைக்கப்படும் என்று அமித் ஷா பேச்சுக்கு, ப.சிதம்பரம் டுவிட்டரில் கிண்டல்
Published on

புதுடெல்லி,

பா.ஜனதா தலைவர் அமித் ஷா நேற்று ஐதராபாத்தில் பேசும்போது, பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு விரைவில் குறைக்கும் என்று கூறினார்.

அதை காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கிண்டல் செய்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், கச்சா எண்ணெயை இலவசமாக வழங்கும் இடம் எதையாவது பா.ஜனதா கண்டுபிடித்து இருக்குமோ? பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி. ஆகியவற்றால் கருப்பு பணம் ஒழிந்து விட்டதாக மத்திய அரசு கூறுகிறது. ஆனால், கருப்பு பணத்தால் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் என்று தலைமை தேர்தல் கமிஷனர் கூறுகிறார். அப்படியானால், கருப்பு பணம் எங்கிருந்து வருகிறது? புதிய ரூ.2,000 நோட்டுகளில் இருந்தா? என்று அவர் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com