அயோத்தியில் ரூ.14.5 கோடி மதிப்புடைய வீட்டு மனையை வாங்கிய அமிதாப் பச்சன்?

அயோத்தியில் ராமர் கோவில் அமைந்துள்ள இடத்திற்கு அருகே பாலிவுட் நட்சத்திரம் அமிதாப்பச்சன் வீட்டு மனை வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அயோத்தியில் ரூ.14.5 கோடி மதிப்புடைய வீட்டு மனையை வாங்கிய அமிதாப் பச்சன்?
Published on

அயோத்தி,

பாலிவுட் திரையுலகின் உச்ச நட்சத்திரமான அமிதாப் பச்சன் அயோத்தியில் சொந்தமாக வீட்டு மனை வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புனித நகரமான அயோத்தியில் வரும் 22 ஆம் தேதி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. ராமர் கோவில் திறக்கப்பட்ட பிறகு அங்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், அயோத்தியில் 10 ஆயிரம் சதுர அடியில் வீட்டுமனையை வாங்கியிருப்பதாகவும் இதன் மதிப்பு ரூ.14.5 கோடி இருக்கும் என்றும் தகவல் வெளியாகியிருக்கிறது. அயோத்தியின் சராயு பகுதியில் இந்த வீட்டு மனை அமைந்து இருக்கிறது. ராமர் கோவிலில் இருந்து வெறும் 15 நிமிட தொலைவிலும் விமான நிலையத்தில் இருந்து அரை மணி நேர தொலைவிலும் அமிதாப் பச்சன் வாங்கியிருக்கும் இடம் அமைந்துள்ளது.

மும்பையைச் சேர்ந்த வீட்டு மேம்பாட்டு நிறுவனமான ஹவுஸ் ஆஃப் அபிநந்தன் லோத்தா (The House of Abhinandan Lodha - HoABL) நிறுவனம் அயோத்தி ராமர் கோவிலுக்கு அருகே 51 ஏக்கர் பரப்பளவில் வீட்டு மனை திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இந்த இடத்தில் ஐந்து நட்சத்திர ஹோட்டலுடன் மிகப் பிரம்மாண்டமான வீடுகள் கட்டப்பட உள்ளன. வருகிற 2028 ஆம் ஆண்டுக்குள் இவை முடிக்கப்படும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com