பஞ்சாப் ரெயில் விபத்து “தண்டவாளம் பகுதியில் நிற்கவேண்டாம் என பலமுறை எச்சரித்தோம்,” தசரா ஏற்பாட்டாளர்

பஞ்சாப் ரெயில் விபத்து சம்பவத்தில் தலைமறைவாக இருக்கும் தசரா ஏற்பாட்டாளார் “தண்டவாளம் பகுதியில் நிற்கவேண்டாம் என பலமுறை எச்சரித்தோம்,” என கூறியுள்ளார்.
பஞ்சாப் ரெயில் விபத்து “தண்டவாளம் பகுதியில் நிற்கவேண்டாம் என பலமுறை எச்சரித்தோம்,” தசரா ஏற்பாட்டாளர்
Published on

அமிர்தசரஸ்,

அமிர்தசரஸ், ஜோதா பதக் பகுதியில் தசரா கொண்டாட்ட நிகழ்ச்சியில் வழக்கம்போல், அங்கு ராவணன் உருவ பொம்மை எரிப்பு நிகழ்ச்சி நடந்தது. அப்போது தண்டவாளத்தில் நின்றவர்கள் மீது கண்ணிமைக்கும் நேரத்தில் ரெயில் ஏறிச்சென்றது. இதில் 59 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. தண்டவாளம் பகுதி அனுமதியளிக்கப்படாத பகுதியாகும். நிர்வாகத்திடம் அனுமதி கேட்கப்படவில்லை என ரெயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இவ்விவகாரம் தொடர்பாக விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே தலைமறைவாக இருக்கும் தசரா விழா ஏற்பாட்டாளர் சவுரப் மதன், வீடியோ மூலம் விளக்கம் வெளியிட்டுள்ளார். அதில், அனைவரையும் ஒன்றாக இணைக்க வேண்டும் என்பதற்காக விழாவிற்கு நான் ஏற்பாடு செய்தேன். அனைத்து தரப்பிலும் நாங்கள் அனுமதியை பெற்றோம். ராவணன் உருவ பொம்பை எரிக்கும் இடத்தை சுற்றிலும் 20 அடி இடம் இருந்தது. எங்களுடைய தரப்பில் எந்தஒரு குறையும் கிடையாது. அங்கு 100 போலீசார் பாதுகாப்பில் இருந்தனர். அங்கு தீயணைப்பு வாகனம், தண்ணீர் லாரிகளும் இருந்தது.

ரெயில்வே தண்டவாளம் பகுதியில் நிகழ்ச்சி நடைபெறவில்லை. தோபி காட் மைதானத்தில்தான் நடைபெற்றது. ரெயில் எதிர்பாராதவிதமாக வந்தது. இது விதி. நாங்கள் ஏற்கனவே தண்டவாளம் பகுதியில் நிற்க வேண்டாம் என 10 முறை எச்சரிக்கையை விடுத்தோம். இச்சம்பவத்தால் நான் மிகவும் வேதனையடைந்துள்ளேன். சிலர் என்மீது அவதூறு பரப்ப வேண்டும் என்று செயல்பட்டு வருகிறார்கள், சொந்த பகையின் காரணமாக எனக்கு எதிராக பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது, என தெரிவித்துள்ளார். இருப்பினும் அவர் எங்குள்ளார் என்பது தொடர்பான தகவல் வெளியாகவில்லை.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com