நிலக்கரி தட்டுப்பாடு: ஆந்திரா முதல் மந்திரி பிரதமருக்கு அவசர கடிதம்

ஆந்திர அனல் மின் உற்பத்தி நிலையங்களுக்கு, போதிய நிலக்கரியை ஒதுக்கீடு செய்ய ஜெகன்மோகன் ரெட்டி பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளார்.
நிலக்கரி தட்டுப்பாடு: ஆந்திரா முதல் மந்திரி பிரதமருக்கு அவசர கடிதம்
Published on

விசாகபட்டினம்

ஆந்திராவில் மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி கையிருப்பு ஓரிரு நாட்களுக்கே தாங்கும் என்பதால், அவசர உதவி கோரி அம்மாநில முதல் மந்திரி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

பிரதமர் மோடிக்கு ஜெகன்மோகன் ரெட்டி எழுதியுள்ள கடிதத்தில், மாநிலத்தின் ஒட்டுமொத்த மின்தேவையில் 45 சதவீதத்தை வழங்கும், ஆந்திர மின் உற்பத்தி கழகத்தின் நிலக்கரி கையிருப்பு ஓரிரு நாட்களுக்கே வரும் என்றும், பற்றாக்குறை காரணமாக மின் உற்பத்தி நிலையங்கள் 50 சதவீத திறனில் மட்டுமே இயங்குவதாகவும் கூறியுள்ளார்.

மின்பற்றாக்குறையை ஈடுகட்ட பெருமளவில் வெளிச்சந்தையை சார்ந்திருப்பதாகவும், விலை யுனிட் 4 ரூபாய் 60 காசுகள் என்ற நிலையில் இருந்து 15 ரூபாயாக உயர்ந்திருப்பதாகவும் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். இந்த நெருக்கடியான நிலையை சமாளிக்க ஆந்திர அனல் மின் உற்பத்தி நிலையங்களுக்கு, போதிய நிலக்கரியை ஒதுக்கீடு செய்ய ஜெகன்மோகன் ரெட்டி வலியுறுத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com