தெலுங்கானாவில் மீண்டும் அதிர்ச்சி சம்பவம் : மேலும் ஒரு பெண் சடலம் எரிந்த நிலையில் மீட்பு

தெலுங்கானாவில் சம்ஷாபாத் பகுதியில் மற்றொரு பெண்ணின் உடல் எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானாவில் மீண்டும் அதிர்ச்சி சம்பவம் : மேலும் ஒரு பெண் சடலம் எரிந்த நிலையில் மீட்பு
Published on

ஐதாராபாத்,

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் மாவட்டம் சம்ஷாபாத் பகுதியில் கால்நடை மருத்துவரான 26 வயது இளம்பெண், பலாத்காரம் செய்யப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த அதிர்ச்சி சம்பவத்தின் சுவடுகள் மறைவதற்குள், பெண் டாக்டர் கொலை செய்யப்பட்டு, எரிக்கப்பட்ட இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் மற்றொரு பெண்ணின் உடலும் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த இரண்டு கொலைகளுக்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com