டெல்லியில் ராணுவ அதிகாரியின் மனைவி கொலை, மேஜர் நிகில் ராய் மீரட்டில் கைது

புதுடெல்லியில் ராணுவ அதிகாரியின் மனைவி கொலை செய்யப்பட்டதில் மேஜர் நிகில் ராய் மீரட்டில் கைதுசெய்யப்பட்டார்.
டெல்லியில் ராணுவ அதிகாரியின் மனைவி கொலை, மேஜர் நிகில் ராய் மீரட்டில் கைது
Published on

புதுடெல்லி,

ராணுவ அதிகாரி அமித் திவேதி, மனைவி சைலஜா மற்றும் 6 வயது மகனுடன் டெல்லியின் நரினாவில் உள்ள ராணுவ குடியிருப்பில் வசித்துவந்தார். அமித் திமாபூரில் பணியில் உள்ளார், டெல்லிக்கு பயிற்சிக்காக வந்துள்ளார். அவருடைய மனைவியின் சடலம் டெல்லி கன்டோன்மென்ட் மெட்ரோ ரெயில் நிலையம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. சைலஜாவின் கழுத்து அறுக்கப்பட்டுள்ளது என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் அவர் மீது வாகனம் ஏற்றப்பட்டு இருந்தது. கொலை செய்தவர்கள் அவர் மீது வாகனம் ஏற்றினார்களா என்பது உறுதிசெய்யப்படவில்லை. அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை சேகரித்து போலீசார் விசாரணையை தொடங்கினர்.

இவ்விவகாரம் தொடர்பாக டெல்லி போலீஸ் தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளது. டெல்லி போலீஸ் இவ்வழக்கு விசாரணை தொடர்பாக உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் ராணுவ மேஜர் நிகில் ராயை கைதுசெய்துள்ளது என போலீஸ் தெரிவித்துள்ளதாக இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com